கோவை தண்டவாளத்தில் குழந்தை சடலம் – தனிப்படை போலீசார் விசாரணை !

தண்டவாளத்தில் குழந்தை சடலம் – கொலை சந்தேகத்தில் 2 தனிப்படைகள் விசாரணை.;

Update: 2025-09-16 09:15 GMT
கோவை, போத்தனூர் அருகே இருகூர்–ராவாத்தூர் தண்டவாளம் அருகே நேற்று ஒன்றரை வயது ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. அருகில் மிளகாய் பொடி, கோழி ரத்தம், கோழிக்கால் போன்றவை இருந்ததால் நரபலி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், “கொலை செய்து திசை திருப்பும் நோக்கில் அவை வைக்கப்பட்டிருக்கலாம்” என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தை ரயிலில் சிக்கி உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. பாபு தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News