கோவையில் போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் வருமான வரி சோதனை !
தொடர்ந்து நான்காவது நாளாக கோவையில் போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் வருமான வரி சோதனை.;
போத்தீஸ் ஜவுளி மற்றும் நகைக் கடைகள் உட்பட போத்தீஸ் நிறுவனங்களுக்கு கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில், கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள இரண்டு ஜவுளிக்கடைகளில் 4 நாட்கள் சோதனை நடந்தது. அங்கு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒப்பணக்கார வீதியில் உள்ள போத்தீஸ் சொர்ண மஹால் நகைக் கடையில் நேற்று நான்காவது நாளாகவும் சோதனை தொடர்ந்தது.