கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் போராட்டம் !

அரசு அலுவலகங்களில் அண்ணா–அம்பேத்கர்–பெரியார் புகைப்படம் வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் போராட்டம்.;

Update: 2025-09-16 09:22 GMT
கோவை அரசு அலுவலகங்களில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், பெரியார் ஆகியோரது புகைப்படங்களை வைக்க வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டம் நடத்தினர். கட்சித் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கச் சென்ற போது, அலுவலகத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டனர். அரசாணை உடனடியாக அமல்படுத்தப்படாவிட்டால், நாங்களே புகைப்படங்களை வைப்போம் என எச்சரித்தனர்.

Similar News