கோவையில் மாநகராட்சி குப்பை வாகன பேட்டரி திருடர்கள் பொதுமக்கள் கையில் சிக்கினர்
மாநகராட்சி வாகன பேட்டரி திருடர்களை பொதுமக்கள் தடுத்து ஒப்படைப்பு.;
கோவை சரவணம்பட்டி பகுதியில் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரிகளை திருடிய இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து மரத்தில் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திமா நகர் 25-வது வார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி வாகனங்களில் இருந்து பேட்டரி திருடிய சிங்காநல்லூரை சேர்ந்த கஞ்சா பாலு, புலியகுளத்தை சேர்ந்த ரவி ஆகியோரை அப்பகுதி மக்கள் கையிலே அடக்கினர். தகவலறிந்து வந்த காவல்துறை, இருவரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் குறித்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.