கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றி திரியும் ஆடுகள் பறிமுதல் !
சாலையில் கட்டி வைக்காத கால்நடைகள் பறிமுதல் – மாநகராட்சி கடும் எச்சரிக்கை.;
கோவை நகரில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள் விபத்துக்கும், பொதுமக்கள் பாதிப்புக்கும் காரணமாக உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சாய்பாபா காலனி அண்ணாநகர் வேலப்பர் வீதியில் நாகராஜ் என்பவரின் ஆடுகள் சாலையில் சுற்றித் திரிந்ததால் விபத்து ஏற்பட்டது. முன்னர் எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தும் கவனிக்காததால், உயிரியல் பூங்கா இயக்குனர் சரவணன், விலங்கு நல ஆர்வலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து 8 ஆடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால், சாலையில் கட்டிவைக்கப்படாத கால்நடைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.