ஒசூர் பிஎம்சி பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரியில் பயிற்சி.
ஒசூர் பிஎம்சி பொறியியல் மாணவர்களுக்கு கல்லூரியில் பயிற்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பிஎம்சி கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல்நாள் வகுப்பு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிஎம்சி கல்லூரி நிறுவனத்தின் தலைவர் பெ.குமார் தலைமை வகித்தார். இதில், அவர் பேசும்போதுஅண்ணா பல்கலைக்கழகம் போதிக்கும் பாடப்பிரிவு மட்டுமின்றி, தொழிற்சாலைக்கு தேவையான திறமையை வளர்க்கும் கல்லூரியாக இது திகழ்கிறது. எனவே, மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்குபடித்து வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்றார்.