காங்கேயத்தில் கீழடி விழா

காங்கேயத்தில் கீழடி விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-09-16 13:31 GMT
காங்கேயம் பேருந்து நிலையம் அருகே, வாரச் சந்தை வளாகத்தில் உள்ள சீரணி அரங்கில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகி கவி தலைமை வகித்தார். இதில், தமிழர் நாகரீகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி அகழ்வாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட வலியுறுத்தி சிஎஸ்ஐ வழிபாட்டுத் தலத்தின் ஈரோடு-சேலம் மண்டலப் பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி, தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கி.வே.பொன்னையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக, காங்கேயம் காவல் நிலைய பகுதியில் இருந்து பேருந்து நிலையம் வரையில் கீழடி அகழ்வாய்வு அறிக்கை வெளியிட வலியுறுத்தி பேரணியும் நடைபெற்றது. இதில், புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் நிர்வாகிகளான ஸ்டாலின், பொன்.சிவா, கண்ணுசாமி, பழ.திருமூர்த்தி, காங்கேயம் நகர்மன்ற துணைத் தலைவர் கமலவேணி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News