உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு;

Update: 2025-09-16 13:47 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,காரணைப் புதுச்சேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாம் ஊராட்சி மன்ற தலைவர் நளினி ஜெகன் ஏற்பாட்டில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன் தலைமையில் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் முன்னிலையில் நடைப்பெற்ற இம்முகாமில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் , செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு கலைஞர் உரிமைத்தொகை,பட்டா,குடும்ப அட்டை,மின் இணைப்பு,ஆதார் கார்டு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளித்தனர். அதனைத்தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம், முதியோருக்கு மருத்துவ பெட்டகங்கள் மற்றும் விதை தொகுப்புகள் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஞானம் வினோதினி,ஒன்றிய கவுன்சிலர் மோகனா கண்ணன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன்,மீனாட்சி,ஊராட்சி கழகம் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள்,துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

Similar News