பக்கிள் ஓடை கழிவுகளால் சுகாதர சீர்கேடு!
பக்கிள் ஓடை கழிவுகளால் சுகாதர சீர்கேடு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!;
தூத்துக்குடி பண்டுகரை சாலையில் பக்கிள் ஓடையில் அகற்றப்பட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எம்பவர் இந்தியா கெளரவ செயலாளர் ஆ.சங்கர் கூறுகையில், "தூத்துக்குடி பண்டுகரை மேற்கு பகுதி சாலையில் பக்கிள் ஓடையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள் சாலையோரங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 15 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் உள்ளதால் சுகாதார கேடு நிலவுகிறது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடையினர் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பக்கிள் ஓடையில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுகளை அகற்றுவதற்காக எடுக்கப்பட்ட தடுப்பு வேலிகளை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.