பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி-சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற உதயநிதி ஸ்டாலின்.

பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி-சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற உதயநிதி ஸ்டாலின்.;

Update: 2025-09-17 06:41 GMT
பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி-சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற உதயநிதி ஸ்டாலின். தந்தை பெரியார் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் ஆகியோர் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சமூக நீதி நாள் உறுதிமொழியினை வாசிக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Similar News