நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த நபர், தற்கொலைக்கு முயற்சி

நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த நபர், தற்கொலைக்கு முயற்சி;

Update: 2025-09-17 12:43 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 60. இவருக்கும், சித்தாமூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், 1.5 சென்ட் வீட்டு மனை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. செய்யூர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கும் நடந்து வருகிறது.இந்நிலையில், நிலத்தை அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற லோகநாதன் தரப்பினர், 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன் வந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர். அப்போது, செய்யூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், இடத்தை அளவீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த உதயகுமார், உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். உடனே, அங்கிருந்த போலீசார், தற்கொலை முயற்சியை தடுத்ததுடன், உதயகுமார் மற்றும் அவரது மருமகன் அருணை கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News