அமாவாசை நாளில் பராமரிப்பு மின் தடை செய்திடகோரி கொங்கு பவர்லூம் சங்கத்தார் மின்வாரிய அதிகாரிகள் வசம் மனு
அமாவாசை நாளில் பராமரிப்பு மின் தடை செய்திடக்கோரி குமாரபாளையம் கொங்கு பவர்லூம் சங்கத்தார் மின்வாரிய அதிகாரிகள் வசம் மனு கொடுத்தனர்.;
அமாவாசை நாளில் பராமரிப்பு மின் தடை செய்திடக்கோரி குமாரபாளையம் கொங்கு பவர்லூம் உரிமையாளர்கள் சங்கத்தார் மின்வாரிய அதிகாரிகளான பள்ளிபாளையம் செயற்பொறியாளர் செல்வம், குமாரபாளையம் உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் ஆகியோர் வசம் மனு கொடுத்தனர். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் விசைத்தறி, நூல் மில்கள், டபுளிங் பேக்டரி, ஆட்டோ லூம்ஸ் உள்ளிட்ட தொழில்கள் செயல்பட்டு வருகிறது. அமாவாசை நாளில் குமாரபாளையம் [பகுதியில் உள்ள அனைத்து ஜவுளி உற்பத்தி தொழில் நிறுவனங்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த நாளில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் செய்வது தான் மின்வாரியத்தின் வழக்கம். தற்போது வழக்கத்திற்கு மாறாக அமாவாசை அல்லாத நாளில் மாதாந்திர மின் பராமரிப்பு செய்வது, அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கும் விஷயமாகும். ஆகவே எப்பவும் போல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அமாவாசை நாளில் வைத்து கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறோம். தற்போது தொழில் நிலை மிகவும் மந்தமாக உள்ளது. இதில் பராமரிப்பு எனும் பெயரில் மேலும் ஒரு நாள் உற்பத்தி பாதிக்கபட்டால் மிகவும் துன்பத்தை ஏற்படுத்தும். அதே போல் ஞாயிற்றுக்கிழமை நாளில் அமாவாசை வந்தால், அடுத்த நாளான திங்கட்கிழமை நாளில் மின் பராமரிப்பு மேற்கொண்டால் எந்த பாதிப்பும் இருக்காது. மாதாந்திர மின் பராமரிப்பு நாள் தவிர மற்ற நாட்களில், மின் பணிகளுக்காக அடிக்கடி மின் நிறுத்தம் செய்யாமல், மதியம் 01:00 மணி முதல் 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்து, மின் சம்பந்தப்பட்ட பணிகள் செய்தால், உற்பத்தி பாதிப்பு இல்லாமல் இருக்க உதவியாக இருக்கும். இவ்வாறு ஆந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை சங்க தலைவர் சங்கமேஸ்வரன், செயாளர் சுந்தரராஜ், பொருளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.