கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர் மொட்டைமாடியில் இருந்து விழுந்து கூலி தொழிலாளி பலி குமாரபாளையம் போலீஸார் விசாரணை...;

Update: 2025-09-17 12:54 GMT
குமாரபாளையம் முதன்மைச் சாலை பகுதியில் திருமணம் மற்றும் திருவிழா விசேசங்களுக்கு பத்தல் மற்றும் அலங்கார செய்யும் தொழில் செய்து வருபவர் சண்முகம் இவர் நேற்று ஈரோடு அருகே உள்ள மஞ்சப்பட்டி கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்காக அலங்காரம் செய்வதற்காக தஞ்சாவூரைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் நள்ளிரவு திரும்பிய வர்களை தனது குடியிருப்பில் உள்ள மூன்றாவது மாடி அறையில் தங்க வைத்துள்ளார் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த களைப்பில் தாங்கள் வைத்திருந்த மது அழுதுவிட்டு உணவு சாப்பிட்டு உள்ளனர் அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதி சேர்ந்த விக்னேஷ் என்ற தொழிலாளி மொட்டை மாடியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே சென்று உறங்கியுள்ளார் இன்று அதிகாலை ஆறு மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல எழுந்த பொழுது விக்னேஷ் காணாமல் தேடி உள்ளனர் அப்பொழுது விக்னேஷ் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பக்கத்து கட்டிடத்தில் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்க முடியாததால் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து மாடியில் இருந்து சடலத்தை கயிற்றின் உதவியுடன் இறக்கி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விக்னேஷ் மாடியிலிருந்து விழுந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை பொறுப்பு காவல் ஆய்வாளர் சங்கீதா மேற்கொண்டு வருகின்றார் கூலி தொழிலாளி மது போதை உறக்கத்தில் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Similar News