வேப்பனப்பள்ளி: பா.ஜனதா சார்பில் மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
வேப்பனப்பள்ளி: பா.ஜனதா சார்பில் மோடி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வேப்பனப்பள்ளி வடக்கு ஒன்றிய தலைவர் லோகேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மேற்கு மாவட்ட பொதுசெயலாளர் அன்பரசு கலந்து கொண்டார். பிரதமர் நரேந் திர மோடியின் பிறந்தநாளையொட்டி வேப்பனப்பள்ளியில் உள்ள பசவேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற் றது. பின்னர் அவர்கள் அங்கு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். வேப்பனப்பள்ளியில் உள்ள குப்பம் ஜங்ஷன் சாலை யில் பா.ஜனதா சார்பில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.