ஓசூர் வைஷ்ணவி நகரில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா.
ஓசூர் வைஷ்ணவி நகரில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 14வது வார்டில் வைஷ்ணவி நகர் பகுதியில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொது மக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் பூங்காவுக்கு வந்து விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் பூங்காவின் முன்புறம் சுற்று சுவர் மற்றும் கேட் பாதுகாப்பு இன்றி உள்ளது. மேலும் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது