அரசு மருத்துவமனையில் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபரால் பரபரப்பு
பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் ஏழு வயது சிறுமியை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபரால் பரபரப்பு;
பவுஞ்சூர் அரசு மருத்துவமனையில் ஏழு வயது சிறுமியை கழுத்தில் கத்தரிக்கோல் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய நபரால் பரபரப்பு. செங்கல்பட்டு மாவட்டம்,பவுஞ்சூர் அடுத்த மேலகண்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்பவர் தனது ஏழு வயது மகள் யாஷிகாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மணிகண்டன் வயது 35 சிறுவங்குணம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருதேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர் திடீரென்று சிகிச்சைக்கி வந்த சிறுமி யாஷிகாவை பிடித்து கையில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து சிறுமியின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது உடனே அங்கிருந்த சிறுமியின் தாய் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பெயரில் காவலர்கள் அந்த நபரை அழைத்துச் சென்றதாக கூறுகின்றனர். அந்த இளைஞர் கஞ்சா அல்லது மது போதையில் இருந்தாரா இல்லை மனநலம் பாதிக்கப்பட்டவரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.