மேலவளம்பேட்டை அரசு பள்ளியில் திடீரென என்ட்ரி கொடுத்த அமைச்சர்

மேலவளம்பேட்டை அரசு பள்ளியில் திடீரென என்ட்ரி கொடுத்த அமைச்சர்;

Update: 2025-09-18 11:27 GMT
மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை அரசு பள்ளியில் திடீரென என்ட்ரி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்.சிறுமி சொன்ன ஒற்றை வார்த்தையில் நெகிழ்ச்சி... செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே மேலவளம்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி இயங்கி வருகிறது இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளி கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திடீரென அரசு பள்ளிக்குள் நுழைந்தார் அப்போது அங்கிருந்த மாணவ மாணவியர்களிடம் சாப்பாடெல்லாம் கரெக்டா வருதா எனவும் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அப்போது நீ படிச்சு முடிச்சுட்டு என்ன ஆகப்போகிறாய் என சிறுவர்களிடம் கேட்டறிந்தார் அவர்கள் ஒவ்வொருவரும் நான் டாக்டர் ஆக போகிறேன், நான் கலெக்டராக போகிறேன் என கூறி வந்தனர் அப்போது திரும்பி வருவார் நான் டீச்சராக போகிறேன் என தெரிவித்தார்.. உடனடியாக ஓ நீ டீச்சராக போறியா சூப்பர் நல்லா படிமா வாழ்த்துக்கள் என நெகிழ்ச்சி அடைந்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி அங்கிருந்தும் விடைபெற்றார்.. அந்தக் காட்சியை அவர் படம் பிடித்து தனது முகநூலில் பதிவு செய்திருந்தார் தற்பொழுது அந்த காட்சி பல நாள் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Similar News