குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். செங்கல் சூளை தொழிலாளி. இன்று இவர் குழுத்துறை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் திடீரென கோர்ட் வளாகத்தில் சத்தம் போட்டும், நீதிமன்ற வேலைகளுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் ரகளை ஈடுபட்டதால் கோர்ட்டுக்கு வந்தவர்கள் அவதி அடைந்தனர். இது குறித்து கோர்ட்டு தலைமை எழுத்தர் நித்தியகலா என்பவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் செல்வராஜை கைது, வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.