ரேஷன் கடை திறந்த எம்எல்ஏ

கிள்ளியூர்;

Update: 2025-09-18 15:09 GMT
கிள்ளியூர் தொகுதி,   மேற்குமாத்திரவிளை, கோத்திரவிளை, காஞ்சிரவிளை, விளாகம் பகுதி மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு நீண்ட தூரம் சென்று மத்திகோடு  பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர்.  இவர்கள் நீண்ட தூரம் சென்று பொருட்கள் வாங்க சிரமமாக இருப்பதால், நியாய விலை கடையை பிரித்து மேற்குமாத்திரவிளையில் ரேசன் கடை அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர்.  அதன் அடிப்படையில்  மேற்குமாத்திரவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் பகுதி நேர நியாய விலை கடை  கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு   ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.  இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங்,  கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய்,    மாவட்ட கூட்டுறவு பதிவாளர் சோமுருகன், கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்குமார், கிள்ளியூர் வட்ட கூட்டுறவு பதிவாளர் ஜீவன் கிறிஸ்டோபர், காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News