ராமநாதபுரம் வரும் தமிழக முதல்வரை சந்திக்க விவசாயிகள் திட்டம்

மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீடு மற்றும் நிவாரணம் தொகை ஓராண்டாகியும் வழங்கப்படாததை கண்டித்து தேசிய நெடுஞ்சாலை முற்றுகையிற்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு;

Update: 2025-09-19 02:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மழையால் பாதிப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு ஓராண்டாகியும் நிவாரணத் தொகை வழங்கப்படாத்தால் உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கடந்த 2024-25 ஆண்டுகளில் விவசாயம் செய்த மிளகாய் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 75 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்து விவசாயம் செய்த நிலையில் பருவம் தவறி பெய்த தொடர் மழை மற்றும் நோயால் மிளகாய் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் காப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த பல மாதங்களாகவே தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகளோடு ழமுற்றுகை போராட்டம், ஒப்பாரி போராட்டம், ரயில் மறியல் கைது போராட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெளிநடப்பு போராட்டம், உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை நிவாரணம் மற்றிம் காப்பீடு தொகை கிடைக்காததால் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மிளகாய் விவசாயிகள் உடனடியாக நிவாரண தொகை வழங்க கோரி கோரிக்கை மனு அளித பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்க கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியுத் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால் ராமநாதபுரம் மாவட்டத்தை உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளை ஒன்று திரட்டி தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகை போராட்டம் நடத்துவதுடன், வரும் 29ஆம் தேதி ராமநாதபுரம் வரும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை குறித்து தெரிவிக்கப் போவதாக தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட மிளகாய் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News