திண்டுக்கல் ராணுவ வீரர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மலை சரிவு விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திண்டுக்கல் ராணுவ வீரர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு;
திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த 8 மதராஸ் ரெஜிமெண்டல் சென்டர்(MRC ) சேர்ந்த ராணுவ வீரர் தாம்சன்(28) இவர் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மலைச்சரிவில் விபத்தில் படுகாயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். ராணுவ வீரர் தாம்சன் அவர்களின் உடலை ஊட்டி வெலிங்டன் ராணுவ நிலையத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ராணுவத்தினர். இதனைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த ராணுவவீரர் தாம்சன் உடல் திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டிக்கு வந்து கொண்டிருக்கிறது.