ஓச்சேரி அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு!
ஓச்சேரி அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு!;
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு பகுதியில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி நேற்று(செப். 18) வியாழக்கிழமை மாலை பழுதாகி நின்றது. இதனால் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து போக்குவரத்தை சரி செய்தனர்.