பாணாவரம் அருகே மது விற்ற இருவர் கைது!
பாணாவரம் அருகே மது விற்ற இருவர் கைது!;
பாணாவரம் அருகே மகேந்திரவாடி பகுதியில் டாஸ்மாக் மது பான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக பாணாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அப்பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மகேந்திரவாடி பகுதியை குப்பம்மாள் (வயது 70) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் மகேந்திரவாடி ஏரிக்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (58) என்பவர் மோட்டார் சைக்கிளில் டாஸ்மாக் மதுபாட்டில் களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.