அரக்கோணத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-09-19 05:20 GMT
அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்ணை பிரசாரம் மற்றும் பூத் கிளை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிபேட்டை கிழக்கு மாவட்ட செய லாளர் சு.ரவி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:- ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியின் சாதனைகளை பூத் அளவில் பாமர மக்களுக்கும், படித்தவர்களுக்கும் டிஜிட்டல் மூலமாகவும், நேரடியாகவும் கொண்டு சேர்க்க வேண்டும். மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது. ஒரு முறை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மறுமுறை வந்ததாக சரித்திரம் இல்லை. எம்.ஜி.ஆர். 3 முறையும், ஜெயலலிதா 2 முறையும் தொடர்ந்து முதல்-அமைச்சராக வந்தனர். ஆனால் கருணாநிதி தொடர்ந்து 2-வது முறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. ஆகவே இந்த முறை எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவது உறுதி என்றார். நிகழ்ச்சியில் சோளிங்கர் முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.சம்பத், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் நகர செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் ஜி.பழனி, இ.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News