குமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சி, கீழகக்கோட்டில் நவநீதகிருஷ்ணன் கோவில் அருகே அனுமதி இல்லாத நாய் மற்றும் கோழி பண்ணை உள்ளது. பண்ணை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், கோழிப்பண்ணையை சேதப்படுத்தியதாக 15 பேர் மீது இரணியல் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. அனுமதி இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மின்வாரியம், இரணியல் போலீசை கண்டித்து நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தக்கலை பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். ஏராளமான கலந்து கொண்டனர்.