தக்கலை : விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

வட்டார அலுவலகம் முன்பு;

Update: 2025-09-19 13:23 GMT
குமரி மாவட்டம் வாள்வச்ச கோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட குருவி விளை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ரேஷன் வாங்குவதாக எழுந்த  புகாரின் பேரில்,  அந்த பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் திறக்கப்படாமல் கிடக்கிறது. எனவே உடனடியாக ரேஷன் கடையை திறக்க கேட்டு விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நேற்று மாவட்ட செயலாளர் மெசியா தலைமையில் தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News