குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் சாலை பாதுகாப்பு கிளப் துவக்க விழா நேற்று நடந்தது. கல்லூரி தாளாளர் பிராங்கிளின் ஜோஸ் தலைமை வகித்தார். மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி பேசினார்கள். விழாவில் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார். சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் கல்லூரி வளாகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு பைக் பேரணியை எஸ் பி ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.