பத்மநாபபுரம் : திமுக பயிற்சி முகாம்

அமைச்சர் பங்கேற்பு;

Update: 2025-09-19 13:34 GMT
குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் இளம் அரசியல் தலைவர்கள் உருவாக்கும் நோக்கில் தொகுதி வாரியாக பயிற்சி முகாம் நடைபெறுகிறது. முதற்கட்டமாக நேற்று 100 இளைஞர்களுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூரில் உள்ள சிஎஸ்ஐ சமூக நல கூடத்தில் நடைபெற்றது. இந்த பட்டறையில் எழுத்தாளர்கள்  சூர்யா சேவியர், வாஞ்சிநாதன் ஆகியோர் பேசினார்கள்.  அமைச்சர் மனோதங்கராஜ் தலைவராக வளர கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள், பண்புகள் போன்றவை குறித்தும், யார் தலைவர் ? என்ன செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் பேசி பயிற்சியை நிறைவு செய்தார்.

Similar News