அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி

இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு!;

Update: 2025-09-19 13:36 GMT
இலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், இலத்தூர் ஊராட்சி ஒன்றியம் பச்சம்பாக்கம், லத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஆர்.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு அவர்கள் கலந்துகொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டையும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சில ராணிபாண்டுரங்கன், நிர்வாகிகள் வெளிக்காடு ஏழுமலை, கண்ணாயிரம், ராமநாதன், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News