இறப்பிலும் இணைபிரியாத தம்பதியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மனைவி இறந்த சில மணி நேரங்களில் கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது;

Update: 2025-09-20 08:41 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நேதாஜி நகரில் குடியிருந்து வருபவர் தங்கராஜ் (86), தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.,இவரது மனைவி பவளக்கொடி(76) ஆகியோர் வசித்து வந்த நிலையில் நேற்று ( செப்.19) இரவு 12 மணி க்கு உடல்நலக் குறைவு காரணமாக மனைவி இறந்த நிலையில் இறந்த தூக்கம் தாங்காமல் தங்கராஜ் அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது., இவர்களுக்கு கணேசன் என்ற மகனும் வாணி தேவி, சாந்தி, வசந்த ராணி என மூன்று மகள்களும் உள்ள நிலையில் திருமணமாகி வசித்து வருகின்றனர் .,

Similar News