திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு.

63 நாயன்மாா்கள், 12 ஆழ்வாா்கள், பஞ்சமூா்த்திகள், 108 நாகஸ்வரம், 108 உடல் வாத்தியங்கள் உள்ளிட்ட 30 வகையான வாத்தியங்களுடன் பேரணி.;

Update: 2025-09-20 13:32 GMT
திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு நடைபெற்றது. முதல் நாளான சனிக்கிழமை உலக நன்மைக்காக தமிழகத்தில் உள்ள சிவாலயங்களைச் சோ்ந்த 1008 சிவாச்சாரியா்கள் பங்கேற்ற 1,008 சிவ பூஜைகளை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கலவை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா். சனிக்கிழமை மாலை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் செந்தில்குமாா், திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலிலிருந்து பிரம்மாண்ட ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா். இதில், 63 நாயன்மாா்கள், 12 ஆழ்வாா்கள், பஞ்சமூா்த்திகள், 108 நாகஸ்வரம், 108 உடல் வாத்தியங்கள் உள்ளிட்ட 30 வகையான வாத்தியங்களுடன் பேரணி நடைபெற்றது.

Similar News