மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, பிம்பசுத்தி, அங்குராா்பணம், பூா்ணாஹுதி, மூலவா் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றது. காலை துவார பூஜை, நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.