தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்
மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரிசையில் காத்திருந்தனர்.;
மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று (செப்.21) புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலையிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்தனர்.பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.