கள்ளக்காதலனை கொன்ற காதலி கைது

மதுரை அருகே கள்ளக்காதலனை கொன்ற காதலி கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-09-21 05:01 GMT
மதுரை சேர்ந்த அரவிந்த் சரத் (33) மனைவியை பிரிந்த பிறகு கள்ளக்காதலி பூபதியுடன் (29) வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு மது போதையில் இருந்த கள்ளக்காதலன் மீது சந்தேகம் கொண்டு பூபதி அவரின் தலையில் கல்லை தூக்கி போட்டார். படுகாயமடைந்த அரவிந்த் சரத் சிகிச்சை பலனின்றி நேற்று (செப் .20) மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தற்போது வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பூபதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News