முன்னாள் சபாநாயகர் மணி மண்டபத்தில் அமைச்சர்கள் நினைவஞ்சலி

மதுரை திருமங்கலம் அருகே முன்னாள் சபாநாயகர் மணிமண்டபத்தில் அமைச்சர்கள் நினைவஞ்சலி செலுத்தினார்கள்.;

Update: 2025-09-21 05:04 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முத்தப்பன்பட்டியில் அமைந்துள்ள முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா அவர்களின் மணிமண்டபத்தில் அன்னாரது மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரான நேரு அவர்கள் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திமுக நிர்வாகிகளுடன் சென்று மலர் வளையம் வைத்து நேற்று (செப்.20) அஞ்சலி செலுத்தினார்கள். உடன் சேடப்பட்டி மணிமாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Similar News