இரண்டு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை, எம்எல்ஏ., எம்பி பங்கேற்பு

இரண்டு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை, எம்எல்ஏ., எம்பி பங்கேற்பு;

Update: 2025-09-21 07:00 GMT
தமிழ்நாடு அரசு சார்பில் எல். எண்டத்தூர், படாளம் ஆகிய பள்ளிகளில் மூன்று கோடி மதிப்பிலான நான்கு வகுப்பறை கொண்ட இரண்டு பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமி பூஜை போடும் பணி எம்எல்ஏ., எம்பி பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம், எல். எண்டத்தூர், படாளம் ஆகிய 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக 3 கோடி மதிப்பிலான நான்கு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஜீ. தம்பு, படாளம் சத்யசாய் ஆகியோ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News