நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை;

Update: 2025-09-21 07:09 GMT
கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 99 லட்சம் மதிப்பிலான நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு மற்றும் நபார்டு வங்கி மூலம் ரூபாய் 99 லட்சம் மதிப்பிலான நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் சம்யுக்தா தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் எம்எல்ஏ, செய்யூர் தொகுதியின் விசிக சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், பேரூர் செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை, விசிக கட்சி மாவட்ட செயலாளர் தமிழினி, முன்னாள் மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், நிர்வாகிகள் அய்யனார், ரஞ்சித், பிரபு, சரண்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News