கோவை: மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் மோடி – பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி!

Update: 2025-09-21 08:23 GMT
மோடியின் தொழில் மகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு எதிராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறிய கருத்து குறித்து பதிலளித்த அவர், “எந்த தலைவராக இருந்தாலும், செல்லும் இடங்களில் மின்தடை போன்ற செயல்கள் சரியானவை அல்ல. அதே நேரத்தில் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் தவறு” என்றார். மேலும், மீனவர்கள் பிரச்சனை குறித்து, “காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவர்கள் பிணமாக வந்தனர். ஆனால் தற்போது பிரதமர் மோடி காலத்தில் ஒருவரும் சுட்டுக் கொள்ளப்படவில்லை. தூக்கு தண்டனைக்குள்ளானவர்களையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார்” என்று தெரிவித்தார்.

Similar News