கோவை: செல்லப்பிராணி திருடப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
கோவையில் உயர்ரக செல்ல நாய் திருட்டு – சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு.;
கோவை சாய்பாபா காலனி, கே.கே புதூர் பகுதியில், நந்தகுமார் மற்றும் மனைவி நந்தினி வளர்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை மர்ம நபர் வீட்டு முன்பு இருந்து பிடித்து சென்று விட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் அந்த நபர் நாயை கழுத்திலிருந்து இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. குடும்பம் அதிர்ச்சியடைந்து, சம்பவத்தை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இது நகை, பணம் கொள்ளை சம்பவங்களுக்கு பின்னர், கோவையில் செல்லப்பிராணிகள் திருடப்படுவதை மக்கள் கவலையுடன் எதிர்கொள்கின்றனர்.