ரத்தின அங்கி அலங்காரத்தில் செல்வ காமாட்சி அம்மன்
மகாலய அமாவாசையையொட்டி பழைய தஞ்சாவூர் சாலையில் உள்ள செல்வ காமாட்சி அம்மன் கோவிலில் விழா;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பழைய தஞ்சாவூர் சாலையில் உள்ள செல்வ காமாட்சி அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை ஒட்டி செல்வ காமாட்சி அம்மனுக்கு இரத்தன அங்கி கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் பழைய தஞ்சாவூர் ரஸ்தா திருவாசகம் செய்திருந்தனர்.