பிரதிநிதிகளை வழிய அனுப்பி வைத்த எம்பி
சண்டிகர் மாநாட்டிற்கு புறப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்;
சண்டிகரில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பேராயத்திற்கு பிரதிநிதிகளை வழி அனுப்பும் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு 2025 செப்டம்பர் 21 முதல் 25 வரை வீரம் செறிந்த பஞ்சாப்,ஹரியான மாநில தலைநகரான சண்டிகர் நகரில் நடைபெறவுள்ளது. திருச்சியில் விமானம் மூலம் செல்லும் பிரதிநிதி தோழர்கள் நாகை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வை.செல்வராஜ், விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.எஸ்.#மாசிலாமணி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.#கேசவராஜ், நாகை மாவட்ட செயலாளர் #சிவகுருபாண்டியன், மாவட்ட பொருளாளர் கே.தவபாண்டியன்,விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.முருகையன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் கே.சுஜாதா ஆகியோரை மன்னார்குடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து நூலாடை அணிவித்து வழியனுப்பி வைக்கப்பட்டது.