கோவை பைபாஸ் சாலை விபத்தில் இளம் பெண் பலி !
கேரள லாரி சக்கரத்தில் சிக்கி இளம் பெண் உயிரிழப்பு – தந்தை படுகாயம்.;
கோவை பைபாஸ் சிந்தாமணிப்புதூர் சிக்னல் அருகே நேற்று நடந்த சாலை விபத்தில், கேரளப் பதிவு எண் கொண்ட சரக்கு லாரியின் சக்கரத்தில் சிக்கி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சூலூர் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த இருதய சகாயராஜ், தனது மகளுடன் ஸ்கூட்டரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வலதுபுறம் திரும்பிய லாரியின் பின்சக்கரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருதயராஜ் தூக்கி வீசப்பட்டார்; ஆனால் அவரது மகள் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சூலூர் போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த தந்தையையும் உடலைவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.