கோவையில் பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் புலனாய்வு நுட்பங்களில் பயிற்சி பெற்ற 1,946 காவலர்கள் சான்றிதழ் பெற்றனர்.;

Update: 2025-09-22 06:42 GMT
பெண் காவல் ஆளிநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், முதலமைச்சர் உத்தரவின்படி கோவை பணியிடை பயிற்சி மையத்தில் 08.03.2025 முதல் 20.09.2025 வரை இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. கோவை, திருப்பூர் மாநகரங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணியாற்றும் பெண் காவலர்கள் முதல் பெண் சிறப்பு எஸ்ஐக்கள் வரை மொத்தம் 1,946 பேர் இதில் பங்கேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்டங்கள், புலனாய்வு நுட்பங்கள், போக்சோ மற்றும் சிறார் வழக்குகள், பாதுகாப்பு விழிப்புணர்வு, மறுவாழ்வு, அரசு உதவிகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன் யோகா வகுப்புகளும் இடம்பெற்றன. நேற்றைய பயிற்சி நிறைவு விழாவில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் T.செந்தில்குமார், கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி அறிவுரைகள் வழங்கினார்.

Similar News