கோவை சாக்கு மூட்டையில் ஆண் பிணம் – நண்பர் கைது !
சாக்கு முட்டையில் ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டதில் அவருடைய நண்பர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.;
கோவை மதுக்கரைச் சேர்ந்த பாலுசாமி கடந்த 11ஆம் தேதி வெளியே சென்று வீடு திரும்பவில்லை. மனைவி பரமேஸ்வரி புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர் மகாலிங்கம் பாலுசாமியை கொலை செய்து, உடலை கோவை–பொள்ளாச்சி சாலை மழை வடிகாலில் சாக்கு மூட்டையில் வீசிவிட்டதாக ஒப்புக்கொண்டார். கள்ளக் காதல் காரணமா, வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.