வெள்ளகுளம் கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை

வெள்ளகுளம் தெருவில் உள்ள பொது கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-09-22 12:37 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி வெள்ளகுளம் தெருவில், 15 ஆண்டுகளுக்கு முன், பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கழிப் பறையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாயின் மின்மோட்டார் பழுதடைந்தது. தண்ணீர் வசதி இல்லாததால் பகுதி மக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது செடிகள் வளர்ந்து கழிப்பறை வளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, வெள்ளகுளம் தெருவில் உள்ள பொது கழிப்பறை கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News