தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கச்சிப்பட்டில் விபத்து அபாயம்

மின் வாரிய துறை அதிகாரிகள், விபத்து ஏற்படும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது;

Update: 2025-09-22 12:39 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்கு உட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பள்ளிக்கூடம் வழியாக, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கச்சிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் கம்பிகள், மிகவும் தாழ்வாக உள்ளன. இதனால், அவ்வழியாக செல்லும் லாரி உட்பட கனரக வாகனங்கள் மின் கம்பியி ல் உரசி, விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின் வாரிய துறை அதிகாரிகள், விபத்து ஏற்படும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News