தாராபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-09-22 15:03 GMT
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் முன்னாள் கிழக்கு மாவட்டச் செயலாளர் நா.தமிழ்முத்து தலைமையேற்றார். இந்நிகழ்வில், தமிழகத்தில் மூன்று முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்சி, எஸ்டி மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்க, கர்நாடக அரசைப் போல தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வழங்கப்படும் நிதியை திருப்பி அனுப்பாமல், சம்பந்தப்பட்ட நலத்துறைகளில் முழுமையாக செலவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதிய ஆணவப் படுகொலைகளை தடுக்கவும், தனிச்சட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்து உடனடியாக அமல்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News