கோவை நீலாம்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கொலு அமைப்பு !

நவராத்திரி சிறப்பு கொலு – வாடிக்கையாளர்களை கவரும் நட்சத்திர விடுதி.;

Update: 2025-09-23 07:13 GMT
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக கோவை நீலாம்பூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் சிறப்பான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவில் தசாவதார பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சிவன் உருவம் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பூரண கும்பம் உட்பட பல்வேறு ஆன்மீக வடிவங்களும் வைக்கப்பட்டு, பக்திமிகு சூழலை உருவாக்கியுள்ளது. நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கொலு, விடுதிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் ஈர்த்துள்ளது.

Similar News