போடி தாலுகா காவல்துறை குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (செப்.22)சிலமலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கனகராஜன் என்பவர் அவரது பெட்டி கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.கடையிலிருந்து 38 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் கனகராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.