தேவதானப்பட்டி பகுதியை சோந்தவர் மதன்குமார் (24). இவர் நேற்று (செப்.22) தேவதானப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த ரிஷாந்த், முத்துப்பாண்டி, பிரியா (எ) பிரியன் ஆகிய மூவரும் அவரிடம் தகராறு செய்து, அவரை தாக்கியதுடன் அவரது இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் தாக்கிய மூவர் மீதும் வழக்கு பதிவு.